ஆண்டுவிழா

மகாத்மா காந்திஜி சேவா சங்கம் முலம் நடைபெற்று வரும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி ஆண்டுவிழா 16-4-2014 தேதி அன்று காமராஜர் திருமண மண்டபத்தில் பள்ளி கமிட்டி தலைவர் ஹாஜி பி. குலாம் முகமது டீ.ளுஉ அவர் தலைமையில் நடைபெற்றது. பள்ளி கமிட்டி செயலாளர் கு. தவமணி வரவேற்பு நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் பொறுப்பாளர்- சாந்தி அறிக்கை வாசித்தார். விழாவிற்கு பள்ளி பொறுப்பாளர் பி. ராஜமோகன் காந்திஜி கல்வி மைய பொறுப்பாளர் இ. ராமசாமி முன்னிலை வசித்தார்கள். சிறப்பு விருந்தினராக காவல்துறை ஆய்வாளர் திரு. சுடலைமணி ஆ.யு.இ டீ.நுன.இ ஆ.Phடைடஇ அவர்களும் பேருராட்சி தலைவர் கே. ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்கள். விழாவில் கே. குருசாமிபாண்டியன் வு. தமிழரசன் எம். முருகன்இ எஸ். முத்துராமலிங்கம் பள்ளி ஆசிரியைகள் ராஜம்இ உமாஇ இயன்முறை மருத்துவர் புனிதா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மாணவ- மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிலி பொற்றோருகளும் கலந்து கொண்டார்கள். இயன்முறை மருத்துவர் புனிதா அவர்கள் நன்றி கூற நாட்டுபன்னுடன் விழா நிறைவு பெற்றது.

2018-07-02T07:34:18+00:00